வேப்பூரில் பாஜக சார்பில் திரங்கா யாத்திரை 'ஆப்ரேஷன் சிந்தூர்' வெற்றி கொண்டாட்டம்

 


வேப்பூரில் 

பாஜக சார்பில் திரங்கா யாத்திரை

'ஆப்ரேஷன் சிந்தூர்' வெற்றி கொண்டாட்டம் 

 









வேப்பூர், மே 30:

இந்திய ராணுவம் நடத்திய 'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பெற்ற வெற்றியை முன்னிட்டு, கடலூர் மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் திரங்கா யாத்திரை நடைபெற்றது. இந்த நிகழ்வில், நல்லூர் வடக்கு ஒன்றியத் தலைவர் கந்தன் தலைமையில், பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் துணைத் தலைவர்கள் பொதுச் செயலாளர் மற்றும் செயலாளர்கள் பொருளாளர் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் இந்நாள் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் பிஜேபி சேர்ந்த ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் மற்றும் அனைத்து தாமரை சொந்தங்களும் கலந்து கொண்டனர்.


யாத்திரையில் கட்சியினர் வேப்பூர் ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து துவங்கி, அரசு மேல்நிலைப் பள்ளி அருகேயுள்ள மேம்பாலம் வரை இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி ஊர்வலமாக சென்று, பொதுமக்களிடம் ராணுவத்தின் துணிச்சல், தியாகம் மற்றும் வெற்றியைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை அளவிலான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.



Post a Comment

Previous Post Next Post