லட்டுல கொழுப்பு.. மகா பாவம் பண்ணிட்டாங்க! அப்பவே சொன்னேன் கேட்கலையே! மாஜி தலைமை அர்ச்சகர் பகீர்
அண்டை மாநிலமான ஆந்திராவில் திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் தயாரிக்க கடந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலப்படம் செய்த நெய் பயன்படுத்தப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருப்பதி தேவஸ்தானத்தை பொறுத்தவரை லட்டு தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் அனைத்தும் "AP eProcurement" "eGP Portel" எனப்படும் (E Action) இணையவழி ஏல முறையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைந்தபின் திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான அதிகாரியாக சியாமளா நியமனம் செய்யப்பட்டார் அவர் மேற்கொண்ட ஆய்வில் தான் தற்போது நெயில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் ஐந்து நிறுவனங்களுக்கு நெய் சப்ளை செய்ய டெண்டர் அனுப்பப்பட்ட நிலையில், 68,000 கிலோ நெய்யில் 20 ஆயிரம் கிலோ நெய் வரை கலப்படமான நெய் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு,” ஜெகன்மோகன் ஆட்சி காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் உபயோகப்பட்டு இருக்கிறது. இது மிகப்பெரிய அபச்சாரம். சுவாமியின் பணத்தை கொள்ளையடித்து இருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் சுவாமியின் பிரசாதத்திலும் கலப்படம் செய்து இருக்கின்ற லட்டு மட்டுமல்லாமல் அனைத்து பிரசாதத்திலும் கலப்படம் செய்யப்பட்டுள்ளது” எனக் கூறியிருந்தார்.
அவரது குற்றச்சாட்டை அடுத்து பல இந்து அமைப்புகள், திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள், பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராகவும், தேவஸ்தான நிர்வாகத்திற்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்திருக்கிறது. இந்த நிலையில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் பன்றிக் கொழுப்பு, எருமை கொழுப்பு, மீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை கலந்துள்ளதாக மத்திய அரசின் பகுப்பாய்வு அறிக்கையும் உறுதி செய்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக தான் அப்போதே எச்சரித்ததாகவும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என கோவிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர் கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசிய திருமலை கோவிலின் முன்னாள் அர்ச்சகர் ரமண தீக்ஷிதுலு கூறுகையில், " லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தும் பசு நெய்யில் அதிக கலப்படம் இருந்ததுடன், தரமில்லாமல் இருந்தது. இதை பல ஆண்டுகளுக்கு முன்பே கவனித்தேன்.
அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அறக்கட்டளை தலைவர் முன் வைத்தேன். ஆனால் அதனை அவர்கள் கண்டுகொள்லவில்லை. முன்னாள் அரசு மிகப்பெரிய பாவத்தை செய்துள்ளது கோடிக்கணக்கான பக்தர்கள் மிகுந்த நம்பிக்கையும் பக்தியும் கொண்ட புண்ணிய கோவிலில், தற்போது அரசு பால் பண்ணைகளில் இருந்து பசு நெய்யை கொண்டு, சுத்தமான நெய்யில் உணவுப் பொருட்களை தயாரித்து வருகின்றனர்.” என்றார்.
Tags
#TamilNadu
breaking and live updates
Breaking And Live Updates Latest News
Breaking And Live Updates News in Tamil